இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு - இந்திய கலாச்சார அமைப்பு கண்டனம்

Oct 9 2019 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய கலாசார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கும்பல் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது பீஹார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய கலாசார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் ஹிந்தி நடிகர் நசிருதீன் ஷா, சினிமா ஒளிப்பதிவாளர் ஆனந்த் பிரதான், வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர், எழுத்தாளர் அசோக் வாஜ்பாய், கல்வியாளர் இரா.பாஸ்கர், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உட்பட பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுக்கு இந்திய கலாசார அமைப்பு சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் நாட்டில் உள்ள பிரச்னைகள் பற்றி கூறி அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதுவது தேசத்துரோகமா? என கேள்வி எழுப்பப்படுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00