மஹராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களுக்‍கு வரும் அக்‍டோபர் 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் - 24-ம் தேதி வாக்‍கு எண்ணிக்‍கை - நாங்குநேரி, விக்‍கிரவாண்டி தொகுதிகளில் அக்‍டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Sep 21 2019 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்‍கான சட்டப்பேரவை தேர்தலுடன், வரும் அக்டோபர் 21ம் தேதி, தமிழகத்தில் விக்‍கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்‍கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

288 தொகுதிகள் கொண்ட மஹாராஷ்ட்ரா சட்டப்பபேரவையின் பதவிக்‍காலம் வரும் நவம்பர் 9ம் தேதி முடிவடைகிறது. 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டப்பபேரவையின் பதவிக்‍காலம் வரும் நவம்பர் 2ம் தேதி முடிவடைகிறது.

இதனையொட்டி, இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அக்‍டோபர் 21ம் தேதி, இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா அறிவித்தார்.

மஹாராஷ்ட்ராவில், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளான கச்சிரோலி மற்றும் கோண்டியாவில், தேர்தலின்போது பாதுகாப்பு அதிகரிக்‍கப்படும் என்று அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்‍கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பிளாஸ்டிக்‍ பயன்பாட்டை தவிர்க்‍க வேண்டும் என்று திரு. சுனில் அரோரா வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, தமிழகத்தில் நாங்குநேரி, விக்‍கிரவாண்டி ஆசிய இரு தொகுதிகளுக்‍கும் வரும் அக்‍டோபர் 21ம் தேதியே இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்‍கு வந்தன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00