இந்தியாவுக்கு 5 நாள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள மங்கோலிய அதிபர் -பிரதமர் மோடியை சந்தித்து முக்‍கிய பேச்சுவார்த்தை

Sep 20 2019 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுக்கு 5 நாள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள மங்கோலிய அதிபர் கட்மாகின் பட்டுலா இன்று, ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் மலரஞ்சலி செலுத்தினார். அவருடைய இந்த சுற்றுப் பயணத்தின்போது, சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்தியா-மங்கோலியா இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில், மங்கோலிய அதிபர் கட்மாகின் பட்டுலா நேற்று டெல்லிக்கு வருகை தந்தார். விமானநிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று காலை அவருக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவரை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ராணுவ மரியாதையை மங்கோலிய அதிபர் ஏற்றுக் கொண்டார்.

பின்னர், ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்ற மங்கோலிய அதிபர், மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் திரு. நரேந்திரமோடியை, மங்கோலிய அதிபர் சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக Gandan மடாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் திருவுருவச் சிலையை மங்கோலிய அதிபரும், இந்திய பிரதமரும், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் திறந்து வைக்கிறார்கள். குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடுவையும் மங்கோலிய அதிபர் சந்தித்துப் பேசுகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00