உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்‍கான கார்ப்பரேட் விரி விகிதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பின் எதிரொலி - இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வு

Sep 20 2019 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்‍கான கார்ப்பரேட் விரி விகிதம் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்ததையடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி ஏற்றம் கண்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் ஏற்றம் காணாத இந்திய பங்குச்சந்தைகளில் இன்று அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119 புள்ளிகள் உயர்ந்து, 36 ஆயிரத்து 213 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்து 10 ஆயிரத்து 729 புள்ளிகளாகவும் இருந்தன.

இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்த பின்னர், பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 600 புள்ளிகள் உயர்ந்து, 37 ஆயிரத்து 767 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை நிஃப்டி 452 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 157 புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆகின.

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்‍கான கார்ப்பரேட் விரிவிகிதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்புக்‍கு பின்னர், இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 66 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 68 காசுகளாக உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00