சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்‍கு உட்படுத்தப்பட்ட வழக்‍கு - தேடப்பட்டு வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் கைது

Sep 20 2019 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த், கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்துக்‍கு சொந்தமான பல்கலைக்‍கழகம், உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு, முதுநிலை சட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்தார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக்கூறி சின்மயானந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்‍கப்பட்டார்.

வழக்‍கு தொடர்பான 43 வீடியோக்கள் அடங்கிய பென் ட்ரைவை, பாதிக்‍கப்பட்ட மாணவி, சிறப்பு விசாரணைக்குழுவிடம் அளித்தார். நீதிபதி முன்னிலையில், பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலமும் அளித்தார். சின்மயானந்தாவிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் அளித்தும், இதுவரை அவரை கைது செய்யாததால், தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மாணவி தெரிவித்தார். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00