பட்ஜெட் செலவினங்களை திட்டமிட்டு மேற்கொள்ளாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது சாத்தியமில்லை - மத்திய அரசுக்‍கு ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுறுத்தல்

Sep 20 2019 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
பட்ஜெட் செலவினங்களை திட்டமிட்டு மேற்கொள்ளாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை உடனே மேம்படுத்துவது சாத்தியமில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்‍தி கந்ததாஸ், மத்திய அரசுக்‍கு அறிவுறுத்தியுள்ளார்.

மும்பையில் பொருளாதாரம் தொடர்பாக நடந்த மாநாட்டில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்திகந்த தாஸ், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பால், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். இது நாட்டின் பொருளாதாரத்தை, வளர்ச்சி பாதையில் திருப்பிவிடும் என்று நம்புவதாகவும் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அடிப்படை கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல பட்ஜெட் ஒதுக்கீடுகளை திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும் என யோசனை தெரிவித்தார். அவ்வாறு செய்யாவிட்டால் வளர்ச்சிக்கான சாத்தியம் குறைவுதான் என்று சக்‍திகந்த தாஸ் கூறினார். நாட்டின் பணவீக்கம் அடுத்த ஒரு வருடத்திற்கு 4 சதவீதம் என்ற அளவிற்கு கீழ் இருக்கும் என்றும், வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00