ஐ.என்.எக்‍ஸ் மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்‍கு - முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் நீதிமன்றக்‍ காவல் அக்‍டோபர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு

Sep 19 2019 8:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்‍ஸ் மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்‍கில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரத்தின் நீதிமன்றக்‍ காவலை வரும் அக்‍டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்‍ஸ். மீடியா முறைகேடு வழக்‍கில் ப.சிதம்பரம் சார்பில் தாக்‍கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனைத்தொடர்ந்து, சிதம்பரத்தை இன்றுவரை நீதிமன்ற காவலில் வைக்‍க டெல்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சிதம்பரம், டெல்லி திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டார்.

சிதம்பரத்தின் 14 நாள் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து, அவரை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். சிதம்பரத்தை, வரும் அக்‍டோபர் 3ம்​தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

73 வயதாகும் சிதம்பரம், பல்வேறு நோய்களால் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற காவலில் உடல் எடை குறைந்துள்ளதால், சிறப்பு உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், அவரது வழக்‍கறிஞர் திரு. கபில் சிபல் கோரிக்‍கை வைத்தார். இதையடுத்து, சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது. ப.சிதம்பரம், டெல்லி திஹார் சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00