மகாராஷ்ட்ராவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி - ஜம்மு காஷ்மீரில், ஊழல், தீவிரவாதத்தை ஒழிக்‍கவே, சிறப்பு அந்தஸ்து நீக்‍கப்பட்டதாக பேச்சு

Sep 19 2019 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீரில், ஊழல், வன்முறை, பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிக்‍கவே, சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370வது நீக்கம் செய்யப்பட்டதாக பிரதமர் திரு. நரேந்திர​மோடி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ராவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாசிக் பகுதியில் 'மகாஜனதேஷ் யாத்திரை' என்னும் பெயரில் இன்று நடந்த பிரசாரக்‍கூட்டத்தில் பிரதமர் திரு. மோடி உரையாற்றினார். கடந்த 5 ஆண்டுகளில், மஹாராஷ்ட்ராவில், பா.ஜ.க அரசு அதிக வளர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். தாங்கள் அளித்த வாக்குறுதியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் எனத் தெரிவித்த பிரதமர், மத்திய அரசின் 100 நாள் சாதனையை பட்டியலிட்டார்.

குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தை சுட்டிக்‍காட்டினார். காஷ்மீர் விவகாரத்தில் அரசு மட்டும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், 130 கோடி இந்திய மக்‍களின் உணர்வினை வெளிப்படுத்தும் விதமாகவே, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370வது நீக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.

ஊழல், வன்முறை, பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிக்‍கவே, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது, காஷ்மீரில் உள்ள இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோர், வன்முறையில் இருந்து வெளிவந்து, புதிய முன்னேற்றத்திற்கான வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00