ஜம்மு காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மத்திய அரசின் சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

Sep 10 2019 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து அளிக்‍கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது மத்திய அரசின் சாதனை என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், அம்மாநிலத்தின் வளர்ச்சிக்‍காகவே சிறப்பு அந்தஸ்து நீக்‍கம் செய்யப்பட்டாதாக கூறினார்.

திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் முறையாக பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், அரசின் சாதனைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் விளக்‍கமளித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து, மோடி அரசு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.

வரும் 2022ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் மின்சாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை அரசு இலக்‍காக கொண்டுள்ளதாகவும், அனைவருக்‍கும் வீடு திட்டத்தின் கீழ், 2 ஆண்டுகளில், ஒரு கோடியே 93 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் உறுதியளித்தார். வங்கிகள் இணைப்பால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 16 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் திட்டம் மூலம் இணைக்‍கப்பட்டுள்ளதாகவும், 41 லட்சம் பேர் மக்‍கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளதாகவும், திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00