சந்திரயான்-2 விண்கலத்தின் விக்‍ரம் லேண்டரிலிருந்து இன்னும் சிக்‍னல் கிடைக்‍கவில்லை -தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Sep 10 2019 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் கருவியான விக்‍ரம், நிலவில் எங்குள்ளது என கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதனுடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் கருவியான விக்‍ரம், கடந்த 7ம் தேதி, நிலவின் குறிப்பிட்ட இடத்தில் தடம் பதிக்‍க வேண்டிய இறுதி நேரத்தில், தகவல் தொடர்பை இழந்தது. விக்‍ரம் லேண்டரை கண்டுபிடிக்‍கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அதன் இருப்பிடத்தை, ஆர்பிட்டர் கருவி புகைப்படம் எடுத்து அனுப்பியது. விக்‍ரம் லேண்டருக்‍கு எந்த சேதமும் ஏற்படாத நிலையில், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது வரை விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00