உலக அளவில் உள்நாட்டு உற்பத்தி 3 புள்ளி 2 சதவீதமாக குறைந்துள்ளதால் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை - நாட்டில் மக்‍களின் நுகர்வும் குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

Aug 23 2019 9:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாகவும், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாக இருப்பதாகவும், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த திருமதி நிர்மலா சீதாராமன், உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதாகவும், உலக பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி இரண்டு சதவீத அளவிலேயே உள்ளதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

வரிவிதிப்புகள் சிலவற்றை திரும்பப்பெறுவது குறித்து சில அறிவிப்புகளை திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும் - ஜி.எஸ்.டி வரியில் உள்ள சிக்கல்கள் களையப்படும் என தெரிவித்த அவர்,எளிதாக தொழில் தொடங்கும் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் - நீண்டகால குறுகியகால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது - மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிக்‍க, நிதி சட்டப் பிரிவு 2 ன் கீழ் இந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

வரும் அக்டோபர் 1-ம் தேதிமுதல் வரி தொடர்பாக அளிக்‍கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்‍கப்படும் - பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் தரப்படும் - ஜி.எஸ்.டி கவுன்சிலுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து, பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஜி.எஸ். டி இன்னும் எளிமையாக்கப்படும் - கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்றும் அதற்கு பதிலாக சிவில் குற்றமாகவே கருதப்படும் என்றும் தெரிவித்தார்.

அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு அனைத்து வருமான வரி உத்தரவுகள், அறிவிப்புகள், சம்மன், கடிதங்கள் போன்றவை மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பு மூலம் வழங்கப்படும் - ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும் -சிறு, குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் தொடரும் - மத்திய பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

பொதுத்துறை வங்கிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்த மூலதன உதவி தொடரும் - வங்கிகளுக்கான மூலதன உதவி மூலம் கடன் வளர்ச்சி அதிகரிக்கும் - வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசுத்தரப்பில் இருந்து 70 ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - சட்ட விதிகள் தொடர்பான அனைத்து சிக்கல்களும் உடனுக்குடன் களையப்படும் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00