தீவிரவாதத்தையும், ஊழலையும் இந்தியா திறமையாக கையாண்டு வருகிறது - பிரான்சில் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் நரேந்திர மோடி உரை

Aug 23 2019 9:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்தியில் இரண்டாம் முறையாக பதவியேற்றுள்ள பா.ஜ.க. தலைமையிலான அரசு, 75 நாட்களுக்குள் பல திடமான, துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளதாகவும், புதிய இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்வதாகவும், பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் யுனெஸ்கோ நிறுவன தலைமையகத்தில், இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, இந்தியாவும், பிரான்சும் எப்போதும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இணைந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.

இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.

புதிய இந்தியாவில் ஊழல், சலுகை, மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், தீவிரவாதம் ஆகியவற்றிற்கு எதிராக, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கர்வம் கொள்வதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவில் புதியதாக தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மத்தியில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. தலைமையிலான அரசு, 75 நாட்களுக்குள் பல திடமான, துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளதாக மோடி பெருமிதம் தெரிவித்தார். தீவிரவாதத்தையும், ஊழலையும் இந்தியா திறமையாக கையாண்டு வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00