காங்கிரஸ் - மஜத மோதல் வெளிப்படையாக வெடித்தது : தேவகவுடா மீது சித்தராமையா கடும் விமர்சனம்

Aug 23 2019 8:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதசார்பற்ற ஜனதாதள மூத்த தலைவர் திரு. தேவகவுடா, தன் குடும்பத்தை தவிர வேறு யாரையும் வளர விட மாட்டார் என்றும், தன் சொந்த இனத்தை சேர்ந்தவர்களைகூட முன்னேறவிட மாட்டார் என்றும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்‍கு இடையேயான மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. திரு. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதாதள மூத்த தலைவர் திரு. தேவகவுடா குறித்து, காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா கடுமையான கருத்துகளை கூறியுள்ளார்.

மக்‍களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, தானும், தேவகவுடாவும் பல தொகுதிகளில் வாக்‍கு சேகரித்ததாக சித்தராமையா தெரிவித்தார். ஆனால், தேவகவுடாவும், அவரது பேரனும் தோற்றதற்கு, தானும், காங்கிரசும்தான் காரணம் என கூறுவதாக தெரிவித்தார். அப்படியானால் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏன் தோற்றனர் என சொல்லட்டுமா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

தேவகவுடா, தான் மற்றும் தன் குடும்பம் மட்டுமே வளர வேண்டும் என நினைப்பாரே தவிர, தன் சொந்த இனத்தை சேர்ந்தவர்களைகூட முன்னேறவிட மாட்டார் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00