உ.பி. அமைச்சரவை முதல்முறையாக விரிவாக்கம் : 23 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்பு

Aug 21 2019 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலத்தில், முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து 23 எம்.எல்.ஏ.க்‍கள், புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்‍கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 43 அமைச்சர்கள் பதவியில் உள்ளனர். ஆனால், இம்மாநிலத்தின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்‍கை அடிப்படையில், அதிகபட்சமாக 63 அமைச்சர்களை நியமிக்கலாம் என்ற நிலையில், பெரும்பாலான துறைகளில் அமைச்சர் பதவிகள் காலியாக இருந்தன. அமைச்சரவையில் இருந்த மாநில பாஜக தலைவர் ஸ்வதந்த்ர சிங் தேவ், சேத்தன் சவுகான், அனுபமா ஜெய்ஸ்வால், முகுத் பிஹாரி வர்மா, சுவாதி சிங் உள்ளிட்டோர் சரியாக செயல்படாத காரணத்தால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், அமைச்சர்களாக இருந்த ரீடா பகுகுணா ஜோஷி, சத்யதேவ் பட்டோரி, எஸ்.பி. சிங் பெஹல் ஆகியோர், மக்‍களவைத் தேர்தலில் வென்றதால், மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில் 23 எம்.எல்.ஏக்‍கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்‍கெண்டனர். அவர்களுக்‍கு ஆளுநர் திருமதி Anandiben Patel பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00