வடமாநிலங்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - யமுனை நதியில் அபாய அளவைத் தாண்டிய வெள்ளம் : பஞ்சாப், உத்தரகண்டில் கிராமங்கள் தத்தளிப்பு

Aug 21 2019 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில், சமீபத்தில் பெய்த கனம‌ழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில், சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ‍இந்த 4 மாநிலங்களில், இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். டெல்லியில் உள்ள யமுனா ந‌தியின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை தாண்டியது.

கன மழையால், ஹிமாச்சலப் பிரதேசத்தில், 625 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், சட‌்லெஜ் ஆற்றில் இருந்து வெள்ள நீர் வழிந்தோடியதால், லூதியானா, ருப்நகர், ஜலந்தர் உள்ளிட‌்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள், வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில், ‍வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் முடக்கிவிடப்பட்டு உள்ளதாக, மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், ​​​​​​ஹெலிகாப்டர் மூலம் உணவு எடுத்துச் ‍செல்லப்பட்டு, வெள்ள‌த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00