கர்நாடகாவில் புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்‍காத எம்.எல்.ஏ.க்‍கள் போர்க்‍கொடி - முதலமைச்சர் எடியூரப்பாவுக்‍கு எதிராக போராட்டம்

Aug 21 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலத்தில் அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால், முதலமைச்சர் திரு. எடியூரப்பா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா முதல்வராக பாஜக தலைவர் திரு.எட்டியூரப்பா கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி பதவியேற்றார். அதனை தொடர்ந்து 25 நாட்களுக்கு பிறகு கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சுயேட்சை எம்.எல்.ஏ உட்பட 17 பேர் அமைச்சராக பதவியேற்றுகொண்டனர். அமைச்சரவை விரிவாக்கத்தில், மூத்த எம்.எல்.ஏ.க்களான உமேஷ்கட்டி, பாலச்சந்திர ஜார்கிகோளி, ரேணுகாச்சார்யா, திப்பாரெட்டி உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், எடியூரப்பா அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அமைச்சர் பதவி கிடைக்காததால் உமேஷ்கட்டி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரியில் சாலையில் டயர்களை எரித்து போராட்டம் நடத்தினர். எடியூரப்பாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அதேபோல் சித்ரதுர்காவில் 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திப்பாரெட்டியின் ஆதரவாளர்களும் சித்ரதுர்காவில் சாலையில் டயர்களையும், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தி, எடியூரப்பாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கர்நாடக அரசியலில், பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் முதலமைச்சர் எட்டியூரப்பா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00