ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதால் வல்லபாய் படேலின் கனவு நனவானது - சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை

Aug 15 2019 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அனைத்து துறைகளிலும் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக்‍ கொடி ஏற்றி வைத்த பின்னர், சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக இன்னுயிரை ஈந்தவர்களுக்‍கு தலைவணங்குவதாக கூறினார். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்று 10 வாரங்கள் கூட ஆகாத நிலையில், அனைத்து துறைகளின் முக்‍கியத்துவம் கருதி, அதற்கான நடவடிக்‍கைகள் எடுக்‍கப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்‍கும் வகையில், ஜம்மு-காஷ்மீருக்‍கான சிறப்பு சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35A போன்றவை நீக்‍கப்பட்டதாகவும் அப்போது கூறினார். நாடு 73-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு மக்‍கள் பாதிக்‍கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த இயற்கை சீற்றத்தால் பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍காக நாம் ஒற்றுமையுடன் இணைந்து ஆதரவாக இருக்‍க வேண்டும் என கேட்டுக்‍கொண்டார்.

"நீரின்றி அமையாது உலகு" என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் பேசிய பிரதமர் மோடி, தண்ணீர் பஞ்சத்தை போக்கி வீட்டிற்கே தண்ணீர் கொண்டுவரும் ஜல்ஜீவன் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார். விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய மூன்றரை லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00