நாட்டின் 73வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்

Aug 15 2019 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் 73வது சுதந்திர தின விழாவையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியக்‍ கொடியை ஏற்றி வைத்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதை கொண்டாடும் 73-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில், இன்று காலை, பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர், பாரம்பரியம் மிக்க டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைக்‍க வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கடற்படை கமாண்டர் தலைமையில், பிரதமருக்கு அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. அதில் முப்படை வீரர்கள் கலந்து கொண்டனர். முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்‍கொண்ட பிரதமர் மோடி, 21 குண்டுகள் முழங்க, 6-வது முறையாக நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

கொடியேற்றி வைத்தபின் நாட்டு மக்‍களுக்‍கு தனது சுதந்திரதின வாழ்த்துகளை தெரிவித்துக்‍ கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, பின்பு சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின விழாவில், மத்திய அமைச்சர்கள், மக்‍களவை சபாநாயகர், வெளிநாட்டு பிரதிநிதிகள், முக்‍கிய பிரமுகர்கள், பொதுமக்‍கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00