ஜம்மு - காஷ்மீருக்கு தாம் எப்போது வரலாம் என்று ஆளுநர் சத்யாபால் மாலிக்கிற்கு ராகுல்காந்தி கேள்வி

Aug 14 2019 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர் சூழல் குறித்து திரு. ராகுல் காந்தி, தவறான தகவல்களை பரப்புவதாகவும், வேண்டுமானால் அவர் இங்கு நேரில் வந்து சூழலை பார்வையிடலாம் என்றும், ஆளுநர் திரு. சத்யாபால் மாலிக் அழைப்பு விடுத்தார். அழைப்பு விடுத்த சிறிது நேரத்திலேயே அதை ஏற்பதாக ராகுல் பதிலளித்தார். மேலும், சுதந்திரமாக பயணித்து, மக்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும், ராணுவ வீரர்களையும் சந்திக்க வழிவகை செய்யுங்கள் என திரு.ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார். ஆனால், காஷ்மீர் விவகாரத்தை ராகுல் அரசியல் ஆக்‍குகிறார் என்றும், பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்றும் சத்யபால் மாலிக்‍ கூறினார். திரு. ராகுல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜம்மு - காஷ்மீருக்கு தாம் எப்போது வரலாம் என்று ஆளுநருக்‍கு கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வித நிபந்தனையும் இன்றி வரத்தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00