சுதந்திர தினத்திற்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தகவல்

Aug 14 2019 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்படும் என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்முவில் கட்டுப்பாடு முழுமையாக தளத்தப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, அங்கு வன்முறை எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதோடு, இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு பிறகு, காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக்கொடியேற்ற இருப்பதாக வெளியான தகவலைய ஆளுநர் சத்யபால் மாலிக் மறுத்துள்ளார். இதனிடையே ஜம்மு பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00