கேரளாவில் பெய்துவரும் கனமழையால் தொற்று நோய் பரவும் ஆபத்து - மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை

Aug 14 2019 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மக்‍களை எச்சரித்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால், மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில், தற்போது நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. H1N1 வைரஸ், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாக்டீரியாவால் பரவும் நோய்கள், மழைக்‍காலங்களில்தான் அதிகம் பரவும் என்பதால், அதனை தடுக்‍க, கேரள அரசு கவனமாக செயல்பட்டு வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி. சைலஜா தெரிவித்தார்.

நோய் தடுப்பு மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், H1N1 வைரஸ் பரவலை தடுக்‍க 1 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், யாருக்காவது நோய் பாதிப்பு இருந்தால், அவர்கள், உடனடியாக மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவுகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00