சரிவை சந்தித்து வரும் வாகன விற்பனை - ஆட்டோமொபைல் துறைக்கான ஜி.எஸ்.டி. வரம்பை குறைக்க கோரிக்கை

Aug 14 2019 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாகனங்களின் விற்பனை 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் விற்பனை கடந்த 10 மாதங்களாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் 18.71 சதவீதம் குறைந்துவிட்டதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 22,45,223 பயணிகள் வாகனம் மற்றும் இரு சக்‍கர வாகனங்கள் ​விற்பனையாகி இருந்தன. ஆனால் இந்த எண்ணிக்‍கை கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 18,25,148 ஆக உள்ளது. மாருதி சுசூகியின் விற்பனை 36.71 சதவீதமும், ஹுண்டாய் மோட்டார் விற்பனை 10.28 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இருசக்கர வாகனத்தை பொறுத்தவரை, ஹிரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை 22.9 சதவீதமும் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 10.53 சதவீதமும், டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தின் விற்பனை 15.72 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன. வாகன விற்பனை வீழ்ச்சி காரணமாக கடந்த 3 மாதங்களில் 15 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த 18 மாதங்களில் 271 நகரங்களில் இருந்த 286 ஷோரூம்கள் மூடப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநிலை தொடர்ந்தால், ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சந்திப்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் விஷ்னு மாத்தூர் தெரிவித்துள்ளார். ஆட்டோமொபைல் துறைக்கு தற்போது 28 சதவீதம் ஜிஎஸ்டி நிர்ணைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை குறைத்து 18 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று அரசுக்கு சியாம் கோரிக்கை வைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00