கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்‍கு ராகுல் காந்தி கடிதம் : மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

Aug 14 2019 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்‍கு கடிதம் எழுதியுள்ள திரு.ராகுல் காந்தி, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வயநாடு தொகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்ட மக்களையும் கடந்த சில தினங்களாக திரு.ராகுல்காந்தி பார்வையிட்டார். மேலும் மாநில அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மறுகட்டமைப்புக்கு உதவும்படியும், உடனடியாக தேவைப்படும் மருந்து, சீரமைப்புக்கான கருவிகள் போன்றவற்றை வழங்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை, அரசு முன்கூட்டியே கண்டறிந்திருந்தால், பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என தெரிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளதாகவும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00