CBSE பள்ளிகளில் பயிலும் SC, ST மாணவர்களுக்கான தேர்வு கட்டண உயர்வு வாபஸ் - பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய பள்ளி கல்வி வாரியம்
Aug 14 2019 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, டெல்லி CBSE பள்ளிகளில் பயிலும் SC, ST மாணவர்களுக்கான தேர்வு கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
டெல்லியில் CBSE பள்ளிகளில் பயிலும் SC, ST மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் 50 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ரூபாயாகவும், பொதுப்பிரிவு மாணவர்களின் தேர்வு கட்டணம் 750-ரூபாயிலிருந்து ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. மத்திய கல்வி வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு, டெல்லி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த எதிர்ப்புக்கு பணிந்து, SC, ST மாணவர்களுக்கான பழைய கட்டணம் 50 ரூபாய் மட்டுமே தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படும் என்று CBSE தெரிவித்துள்ளது. கட்டண உயர்வுத் தொகை டெல்லி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.