ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தால் பா.ஜ.க அரசு நாட்டில் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு - சீனா, பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான் நாடுகளால் வரப்போகும் ஆபத்தை மறந்துவிட்டதாகவும் தாக்கு

Aug 14 2019 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தால் பா.ஜ.க அரசு நாட்டில் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுகளை மத்திய பா.ஜ.க. அரசு திடீரென ரத்து செய்ததால் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன்மூலம் பா.ஜ.க. அரசு தனது கைகளை தானே சுட்டுக்கொண்டதாக ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.திக்விஜய் சிங் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது இதுகுறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள அவர், காஷ்மீர் மக்களிடம் இதுபற்றி எந்த கருத்தையும் கேட்காமல், மத்திய அரசு முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என கூறினார். இது ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளை மேலும் தீவிரமடைய செய்யும் என தெரிவித்தார். எல்லையில் நாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக சீனா, பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான் நாடுகள் இருப்பதை மறந்துவிடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். நாட்டை எந்த மாதிரியான பிரச்சினையில் தள்ளி இருக்கிறோம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்றும் திரு.திக்விஜய் சிங் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00