அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோர் : உயிரை மாய்க்க அனுமதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம்

Jul 19 2019 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெற்றோர் அடிக்கடி சண்டைபோட்டுக்கொள்வதால் மனமுடைந்த சிறுவன் ஒருவன், தனது உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு, சிறுவன் எழுதிய கடிதத்தில், தான் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், தனது தந்தை அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாநில ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகிறார் என்றும், தாய், பீஹாரில் வங்கி அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது தான் தந்தையுடன் வசித்து வரும் நிலையில், தனது பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதால் மிகுந்த மனவேதனை அடைவதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை, தாய், ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள தான், தனது உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கடிதத்தில் உருக்‍கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம், பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பீஹார் மாநில நிர்வாகத்துக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00