சுரங்க மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சரிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் : 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என பிரதமர் மோடி நம்பிக்கை
Nov 20 2023 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை மீட்புப்பணிகள் குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
கடந்த 12ஆம் தேதி உத்தரகாசி மாவட்டத்தி சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர்களை மீட்பதற்காக மூன்று பக்கங்களிலிருந்தும் துளையிடப்பட உள்ளது என்றும், இந்த திட்டங்களை ஐந்து தனித்தனி ஏஜென்சிகள் கையாள உள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் செயலர் அனுராக் ஜெயின் கூறியுள்ளார். இந்தநிலையில் மீட்புப்பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசிய பிரதமர் மோடி, மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.