இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாடு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் டெல்லியில் துவக்கம் : அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்க உள்ளனர்
Sep 23 2023 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
47வது இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. 27ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் ஆயுதப் படைகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், அதிக ராணுவ தளவாடங்களைக் கொண்ட சீனாவை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.