வரும் 26-ம் தேதிக்குள் தமிழகத்துடனான நதிநீர்ப் பங்கீடு குறித்து முடிவு : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தகவல்
Sep 23 2023 9:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டத் தேதியான வரும் 26-ம் தேதிக்குள் தமிழகத்துடனான நதிநீர் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும் என கர்ர்நாடக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது கர்நாடக அணைகளில் இருந்து தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக கூறிய அவர் 26-ம் தேதிக்கு முன்னர் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றார். கர்நாடக விவசாயிகளின் நலன்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.