உ.பி.தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலகுவதாக தகவல் : ஹரிஷ் ராவத் அல்லது தாரிக் அன்வருக்கு வாய்ப்பு என தகவல்
Jun 8 2023 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 399 சட்டமன்ற தொகுதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில், 387 இடங்களில் டெபாசிட் இழந்தது. இதனிடையே உத்தர பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி விலக உள்ளதாகவும், அவருக்கு பதிலாக பொறுப்பாளர் பதவியை உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் அல்லது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வருக்கு வழங்கலாமா? என கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.