ஒடிஷா ரயில் விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த காதல் கவிதை கடிதங்கள் : கண்ணீரை வரவழைத்த கவிதைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள்
Jun 5 2023 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிஷா ரயில் விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்கள் ஒவ்வொன்றும் பல இதயங்களின் வலியையும், ஏக்கத்தையும் பிரதிபலிப்பதாக இருந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தண்டவாளத்தில் கிடந்த பையை திறந்து அதில் இருந்த நோட்டு புத்தகத்தை பிரித்து பார்த்த குழுவினர் சோகத்தில் ஆழ்ந்தனர். சிவப்பு, நீலம், பச்சை என்று பல வண்ணங்களை கவிதையாக பயணி ஒருவர், நோட்டு புத்தகத்தில் கவிதை வடித்து இருந்தார். 'சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன. சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன' என்று வங்காள மொழியில் கவிதை எழுதப்பட்டிருந்தாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். குழந்தைகளுக்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த பொம்மைகள், உடைகள் சிதறி கிடந்தும், கிழிந்தும் கிடந்ததாகவும், அவற்றின் மீது ரத்த கறைகள் காணப்பட்டதாக மீட்புக்குழுவினர் வேதனை தெரிவித்தனர்.