அஸ்ஸாமில் வனத்துறைக்கு சொந்தமான 90 சதுர கிலோ மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு
Jun 1 2023 6:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஸ்ஸாமில், வனத்துறைக்கு சொந்தமான 90 சதுர கிலோ மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 7 ஆயிரம் ஏக்கர் ஓராங் வனப்பகுதியும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பெருமளவில் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழிக்கப்பட்டது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.