கோதுமை கொள்முதல் 260 லட்சம் மெட்ரிக் டன் அளவை கடந்துவிட்டதாக மத்திய உணவுத்துறை தகவல்
Jun 1 2023 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோதுமை கொள்முதல் 260 லட்சம் மெட்ரிக் டன் அளவை கடந்துவிட்டதாக மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் கொள்முதல் மதிப்பைவிட கூடுதல் என கூறியுள்ள மத்திய அமைச்சகம், கோதுமை மற்றும் அரிசி இரண்டையும் சேர்த்து, 579 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு உணவு தானிய கிடங்கில் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையோடு 47 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கோதுமை கொள்முதல் நடந்துள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 21 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் மத்திய அரசு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.