திருப்பதி அருகே பேருந்து மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி : படுகாயமடைந்த இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Jun 1 2023 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பதி-ஸ்ரீகாளஹஸ்தி பிரதான சாலையில் உள்ள மேலபாகா குளம் பகுதியில் சென்ற பேருந்து மீது கார் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பேட் மாவட்டம், தல்வத் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் உயிருக்கு ஆபத்தானநிலையில், திருப்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.