ராஜஸ்தானில் 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நபர் : இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்ட நிலையில் திடீரென வீடு திரும்பியதால் குடும்பத்தார் அதிர்ச்சி
Jun 1 2023 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
34 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் இறந்ததாக சான்றிதழ் பெற்ற நிலையில், உயிருடன் வீடு திரும்பினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பன்சுர் நகரில் வசித்து வந்த ஹனுமன் செய்னி என்பவர் கடந்த 1989 ஆம் ஆண்டு பிழைப்பு தேடி டெல்லிக்கு சென்றார். அங்கிருந்து ஹனுமன் செய்னி திடீரென மாயமாக குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஹனுமன் செய்னி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு அவரது இறப்பு சான்றிதழையும் வழங்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் துறவியாக வாழ்ந்து வந்த ஹனுமன் செய்னி, திடீரென சொந்த கிராமமான பன்சுர் நகருக்கு வந்தார். அங்கு தனது வீட்டை கண்டுபிடிக்க பெரும் சிரமத்துக்கு ஆளான ஹனுமன் செய்னி, தனது நண்பர் ஒருவரை அடையாளம் கண்டு அவரது உதவியுடன் குடும்பத்தினரை கண்டுபிடித்தார். ஹனுமன் செய்னியை அடையாளம் கண்டுகொள்ளவே அவரது மனைவி துர்கா தேவிக்கு நீண்ட நேரம் ஆன நிலையில், தற்போது இறப்பு சான்றிதழை ரத்து செய்ய அவரது குடும்பம் முடிவு செய்துள்ளது.