மணிப்பூர் கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு : 6 முக்கிய வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
Jun 1 2023 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூர் கலவர வழக்கில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் கலவரம் தொடர்பான நிலவரம் குறித்து ஆராய 4 நாட்கள் பயணமாக அங்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூர் கலவரம் தொடர்பான 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தெரிவித்தார். மணிப்பூர் ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் கொண்ட அமைதிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமித்ஷா, கலவரத்தில் காயமடைந்தோர், சொத்துக்களை இழந்தோருக்கான நிவாரணம் தொடர்பாக நாளை அறிவிக்கப்படும் என்றார். கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 5 மருத்துவ குழுக்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ஆயுதங்களை யாரேனும் வீட்டில் வைத்திருந்தால் அதனை ஒப்படைக்க வேண்டும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.