தலைநகர் டெல்லியை குளிர்வித்த கோடை மழை : பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த கனமழை
Mar 30 2023 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடுமையான வெப்பத்தினால் அவதியடைந்த தலைநகர் டெல்லியை கோடை மழை குளிர்வித்துள்ளது. தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் திடீரென பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் டெல்லியை வாட்டி வதைத்து வந்த வெப்பம் தணிந்து டெல்லியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வெப்ப சலனம் காரணமாக டெல்லியில் மழை பெய்துள்ளதாகவும், அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.