மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து விபத்தில் சிக்கிய தாய் மற்றும் மகள் : ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிய பெண்ணை மீட்ட பயணிகள்
Mar 30 2023 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓடும் ரயிலில் ஏற முயன்ற தாய் நிலை தடுமாறி கீழே விழுந்தவுடன் அப்பெண்ணின் மகள் ரயிலில் இருந்து குதித்து தாயை காப்பாற்ற முற்சிக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலா ரயில் நிலையத்தில், தாயுடன் வந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏறியுள்ளார். இளம்பெண்ணை தொடர்ந்து அவரது தாயும் எற முயற்சித்த போது நிலை தடுமாறி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கி கொண்டு சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக சக பயணிகள் அப்பெண்ணை மீட்டனர், அப்போது ரயிலில் எறிய இளம்பெண் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தாயை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சிகளை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர்.