புதுச்சேரியில் 30 மாத நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி அமுதசுரபி ஊழியர்கள் சாலை மறியல்
Mar 30 2023 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபியில் 30 மாத நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி அதன் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. புதுச்சேரி அமுதசுரபி சூப்பர் மார்க்கெட் தொடர்ந்து 3 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்களின் 30 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரியும், மாற்றுப் பணி வழங்கிட வலியுறுத்தி அமுதசுரபி ஊழியர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தி சட்டபேரவை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.