அதானி குழும முறைகேடு தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 3வது நாளாக அமளி - கூச்சல், குழப்பம் நிலவியதால் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு
Feb 6 2023 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 2023 - 24ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 2ம் தேதி முதல் அவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதானி நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கையாக வெளியிட்டது. இந்நிலையில், அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் முடங்கின. இதனைத்தொடர்ந்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.