சத்தீஸ்கரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் : பிரசாரத்திற்கு 0023 எண் கொண்ட புதிய காரை வாங்கிய முதல்வர் பூபேஷ் பாகல்
Feb 4 2023 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2023 சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரச்சாரத்திற்காக 23 என்ற எண் கொண்ட காரை முதலமைச்சர் பூபேஷ் பாகல் வாங்கியுள்ளார். காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் அரசின் பதவிக்காலம், வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளதால், அதற்கு முன்னதாக அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், 0023 என்ற பதிவு எண் கொண்ட புதிய காரை பிரச்சாரத்திற்காக வாங்கியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.