ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் : 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கொளதம் அதானி
Feb 4 2023 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார். அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்தும் கவுதம் அதானி வெளியேறியுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2-ம் இடத்திலிருந்த அதானி 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.