அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் எஞ்ஜீனில் தீ : விமானியின் சாதுரிய செயலால் மீண்டும் தரையிறக்கப்பட்ட விமானம் - பயணிகளுக்கு பாதிப்பு இல்லை
Feb 4 2023 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை அடுத்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி கிளம்பியது. விமானத்தில் 184 பயணிகள் இருந்த நிலையில், விமானம் மேலே கிளம்பி சுமார் ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, ஒரு இன்ஜீனில் தீப்பிடித்து புகை வெளியேறியது. இதனை கண்டுபிடித்த விமானி உடனடியாக விமானத்தை திருப்பி அபுதாபியில் தரையிறக்கினார். இதனையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அனைவரும் நலமுடன் உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.