காங்கிரஸ் தலைமைக்கு தனது பெயரில் சிலர் போலி கடிதம் எழுதுவதாக புகார் : காவல்துறையிடம் புகார் அளிக்கப்போவதாக சித்தராமையா உறுதி
Feb 4 2023 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் தலைமைக்கு தனது பெயரில் சிலர் போலி கடிதம் எழுதி, தனக்கும் தலைமைக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இது போன்று போலி கடிதம் எழுதும் நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பான கடிதத்தின் நகலை வெளியிட்ட அவர், தனக்கும், மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும், தேசிய தலைமைக்கும் இடையே உள்ள உறவை கெடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.