ராஜஸ்தானில் உள்ள பயிற்சி நிறுவன ஹாஸ்டலில் விபரீதம் : ஜன்னலில் சாய்ந்த மாணவர் 6வது மாடியில் இருந்து தலைகுப்புற விழுந்து பலி
Feb 4 2023 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர் 6வது மாடியில் உள்ள ஹாஸ்டலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கும் அந்த நிறுவனத்தில் வெளிமாநில மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் கல்வி நிறுவனத்தின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். தனது நண்பர்களை வழியனுப்பி விட்டு திரும்பிய மாணவர் ஒருவர், ஜன்னல் கதவில் சாய்ந்தபோது அதன் வலை அறுந்து விழுந்ததில் அந்த மாணவர் 6வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.