இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு அதிகரிப்பு : நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர்
Feb 4 2023 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கணிசமாக புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவை உறுப்பினர்கள் சிலர் இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மத்திய அரசு கணக்கில் எடுத்துள்ளதா என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்துள்ள தகவலின் படி 2020ம் ஆண்டு இந்தியாவில் 13 லட்சத்து 92 ஆயிரத்த 179 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2021ம் ஆண்டில் நோயாளிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 14 லட்சத்து 26 ஆயிரத்து 447 ஆகவும், 2022ம் ஆண்டில் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 ஆகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.