மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் : தேசிய புலனாய்வு அமைப்பு அவசர எச்சரிக்கை
Feb 3 2023 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக என்.ஐ.ஏ. அமைப்பு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப் போவதாக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், உளவுத்துறையினர் உஷாராக செயல்படுமாறும், தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலங்களாக நாட்டின் சில பகுதிகளில் எதிர்பாராத குண்டுவெடிப்பு நிகழ்வுகள் நடந்திருக்கும் நிலையில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு தாலிபான் பெயரில் கடிதம் வந்திருப்பதை அடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.