நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் பலன் தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம்
Feb 1 2023 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், அனைவருக்கும் பலன்தரும் பட்ஜெட் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். 2023 - 24ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாகவும், பெண்கள் முன்னேற்றத்திற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். கிராமப்புற பெண்கன் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
அதேபோல் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்க்கையை எளிதாக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.