ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி - விரிவான விபரங்கள் அடங்கிய பிரமாணபத்திரத்தை 6-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
Dec 2 2022 7:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜல்லிக்கட்டு போட்டி எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது குறித்து முழு விவரங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க கோரி, பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டம் தெளிவாக இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், போட்டி நடைபெறும் இடம், காளைகள் அடக்கப்படும் முறை உட்பட முழு விவரங்களை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.