மும்பையில் பெண் யூடியூபரிடம் சில்மிஷம் செய்த 2 இளைஞர்கள் கைது - தாமாக முன் வந்து போலீஸ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை
Dec 1 2022 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் தென்கொரிய பெண் யூடியூபரின் லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது முத்தமிட முயன்ற இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை சாலையை படம்பிடித்துக் கொண்டிருந்த தென்கொரிய பெண் யூடியூபரின் அருகே வந்த இளைஞர்கள் அவரிடம் சில்மிஷம் செய்துள்ளனர். மேலும், பெண் யூடியூபருக்கு முத்தம் கொடுக்க முயன்று அப்பெண்ணை தொல்லை செய்ததுடன் தங்கள் இருசக்கர வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து, பெண் யூடியூபரிடம் சில்மிஷம் செய்த மொபின் சந்த் முகமது ஷேக் மற்றும் முகமது நகிப் அன்சாரி ஆகியோரை கைது செய்துள்ளனர்.